Sunday, February 8, 2015

பட்டாம்பூச்சி விளைவு


காற்றோடை குறித்துச் சொல்கையில் எனக்கு என் பட்டாம்பூச்சி நினைவுக்கு வந்தது... காரணம், பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect).

அது என்ன பட்டாம்பூச்சி விளைவு...?

எங்கோ நிகழும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு கோடியில் ஒரு புயலை ஏற்படுத்தலாம். அதாவது, ஒரு நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது.

இப்படித்தானே எல்லோரும் சொல்கின்றார்கள்..? ஆனால், உண்மையில் அதுவல்ல பட்டாம்பூச்சி விளைவு. அமெரிக்க கணிதவியலாரும், வானவியலாருமான Edward Norton Lorenz என்பாரே முதன் முதலில் இப்பட்டாம்பூச்சி விளைவு குறித்துச் சொல்கிறார்.

ஒரு இயங்கியல் அமைப்பில் (Dynamical System), ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கைத் தேடுவது கேயாஸ் தியரி (Chaos Theory) எனப்படும். ஒரு நிகழ்வு இப்படித்தான் இருக்கப் போகின்றது என்று அனுமானிக்க அதன் ஆரம்ப கணம் நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அந்த ஆரம்ப கணத்தில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்வின் தோற்றம் மிகுந்த வேறுபாடுகளோடு இருக்கும். மிகச் சரியாக எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால், சுத்தமாக எதிர்பார்க்கவே முடியாது என்றும் சொல்லி விட முடியாது. (12B படம் மாதிரிதான்...) இதில்தான் இந்தப் பட்டாம்பூச்சியின் விளைவு குறித்தும் பேசப்படும்.

சரி, இனி நம்ம லோரன்ஸ் சொல்ல வந்தது என்னவென்றால், எங்கோ பிரேசிலில் நிகழும் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பினால் டெக்சாசில் புயலடிக்கும் என்று சொல்லிவிடமுடியுமா (Does the flap of a butterfly’s wings in Brazil set off a tornado in Texas?) என்றுதான் அவர் கேட்க வந்தார். புயலடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். நிச்சயமாக நம்மால் எதையும் சொல்லி விடமுடியாது என்று சொன்னதை நம் மக்கள், அப்படித்தான் நிச்சயமாக நடக்கும் என்று புரிந்துகொண்டு விட்டார்கள்.

No comments:

Post a Comment