அன்னாசிப்பழம் ஒரு கூட்டுக்கனி (Multiple Fruit) (தொகுப்புக்கனி / கொத்துக்கனி (Collective Fruit)) என்பது உங்களுக்குத் தெரியுமா?
செந்தாழை எனப்படும் அன்னாசி பிரேசிலைத் (Mesoamerica பகுதிகள்) தாயகமாகக் கொண்டது. அதற்கும் முன்னரே தென்னமெரிக்க டுபியன் (Tupian) மொழிகளில் nanas (அருமையான பழம்) என்று சொல்லப்படுவதில் இருந்து Ananas comosus என்ற நுட்பப் பெயர் பெறப்பட்டு பின்னர், Ananas வகைகளை Pine என்று அழைப்பதால் இதற்கும் Pine என்ற பெயர் சேர்ந்துகொண்டது. தமிழிலும் அன்னாசி என்றே அழைக்கின்றோம்.
அன்னாசியின் மலர்கள் கொத்து மலர்களாகும் (Inflorescence). அதன் ஒவ்வொரு மலரும் சூல்பிடித்துக் கனியாகும்பொழுது ஒரே கனி போன்று அடுக்கடுக்காக அமைந்து விடுகின்றது. ஆக, அது ஒரே ஒரு கனியல்ல, பல கனிகளின் தொகுப்பு. இது போன்று சீத்தாப்பழம் (Annona squamosa), மல்பெர்ரி (Morus) போன்றவையும் கொத்துக்கனிகளாகும்.
விதைகளற்ற பழமாக இருப்பதால் இதனைக் கன்னிப்பழங்களில் (Parthenocarpy Fruits) வகைப்படுத்துவார்கள். இப்படி விதையின்றி பழமாவதை கன்னிக்கனியமாதல் என்பர். வாழைப்பழம், வெள்ளரி, தர்பூசணி, பேரிக்காய் போன்றவை இவ்வகைப் பழங்களாகும்.
ஃபிபனாச்சி எண்தொடரின் (Fibonacci Series) அமைப்பில் இக்கனிகள் அமைந்திருப்பது நம்மை இயற்கையின் சிறப்பாக அதனை வியக்க வைக்கின்றது.
No comments:
Post a Comment