கேள்வி: பேருந்துப் பயணங்களின்போது.... தொலைவில் இருக்கும் மரங்கள், மலைகள் நம் கூடவே வருவது போல் தோன்றுகின்றதே அது ஏன்?
பதில்:
இதனை Optic Flow என்பார்கள்.
இதை தரவிறக்கி ஏதாவது ஒரு browserல் பாருங்கள்.
நமது பார்வை வீச்சானது ஆங்கில எழுத்து V போன்று இருக்கும். குறுகலான பகுதிக்குள் கடந்து செல்லும் மரங்கள் குறுகிய காலத்திற்குள் நம் பார்வை வீச்சில் இருந்து மறைந்து சென்றுவிடும். பரந்த பகுதிக்குள் இருக்கும் மரங்கள் கடந்து செல்ல சற்று அதிக நேரமாகும். ஆனால் அவையும் பின்னோக்கிதான் சென்று கொண்டிருக்கும்.
நீங்கள் ஒரு தொடர்வண்டியில் அமர்ந்திருக்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் அருகே உள்ள தொடர் வண்டி மிக மெதுவாக முன்னோக்கிச் செல்லத் துவங்குகின்றது. சாளரத்தின் வழியாக வேறு எந்த காட்சிகளும் உங்கள் கண்ணில் படாமல் அந்தத் தொடர்வண்டியினை மட்டும் பார்க்கும்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் தொடர்வண்டி பின்னோக்கிச் செல்வது போன்று உங்களுக்குத் தோன்றும்.
அதேதான் இங்கே அருகே உள்ள மரங்கள் சட்டென பின்னோக்கிக் கடந்து செல்லும்பொழுது தொலைவில் உள்ள மரங்கள் சிறிது முன்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுகின்றது. உண்மையில் அருகே உள்ள மரங்கள் வேகமாக உங்களைக் கடக்கின்றது, தொலைவில் உள்ள மரங்கள் சற்று நேரம் கழித்துக் கடக்கின்றது என்பதுதான் உண்மை.
நாம் நடக்கும்போது நிலவு நம் கூடவே வருவது போல் தோன்றுவதும், இரு வேறு அடுக்குகளில் இருக்கும் மேகங்களில் ஒரு மேகம் பின்னோக்கிச் செல்வது போல் தோன்றுவதும் இதனைப் போன்றதுதான்.
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
இதையும் பாருங்கள்...
No comments:
Post a Comment