Monday, January 19, 2015

தூசு


தூசு அல்லது தூசி என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்ன?

தூசு என்பது காற்றினால் கடத்திச் செல்லப்படும் புவியின் மிக நுண்ணிய துகள்கள். நுண்பெருக்கி மூலம் பார்க்கக்கூடிய அளவிலிருந்து மணல் துகளின் அளவு வரைக்கும் இருக்கலாம்.

உலர்மண்ணின் சிறுதுகள்கள், சாம்பல், கார்பன் மற்றும் தொழிற்சாலைகளின் மாசுக்கள், எரிமலைக் குமுறலினால் வெளிப்படும் துகள்கள், விண்வெளியில் இருந்து புவிக்குள் விழும் துகள்கள்... இவையெல்லாமே தூசுக்கள்தான்.

சமயங்களில் கடற்கரை காற்றில் உப்புத்துகள்களும், அணுக்கரு வெடிப்பில் நிகழும் கதிரியக்கப் பொருள்களும், தாவரங்களின் மகரந்தங்களும் கூட தூசுகளாக இருக்கலாம். நம் உடலின் இறந்த திசுக்களும் தூசுகளாக உதிரும்.


தூசுகளின் விளைவுகள்.

தூசுகள் ஒன்றும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மழை மேகங்கள் உருவாகிட தூசுகள் வேண்டும். பனிப்பொழிவுகளுக்கும் தூசுகள் வேண்டும். சூரிய ஒளியை வடிகட்டுவதிலும், வானிற்கு (நீல)நிறம் கொடுப்பதிலும் தூசியின் பங்கு உண்டு. சூரியக்கதிர்களில் சிலவற்றை மேல் நோக்கித் திருப்பிவிட்டு புவியின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திடவும் தூசுகள் பங்காற்றுகின்றன.

தூசுகள் உயிர்தாதுக்களுடன் சேர்ந்து மண்ணின் மேற்பரப்பை உருவாக்குகின்றன. தாவரங்கள் வளர்ந்திட அது மிக அவசியமாகும்.

இந்த தூசுகளே ஈரப்பதம், வெப்பம் மற்றும் காற்றினைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன.

தாவரங்களின் மகரந்தங்கள், சிறு பூச்சியான Dust mite போன்றவற்றைக் கொண்ட தூசுகள் சில மனிதர்க்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

No comments:

Post a Comment