Monday, January 19, 2015

விண்வெளி - வெளிச்சமா அல்லது இருளா?



21.03.2012

விண்வெளி எப்படி இருக்கும், வெளிச்சமாகவா அல்லது இருளாகவா..?

வெளிச்சம் இருள் இரண்டுமே நிறைந்திருக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் வெளிச்சம், பார்க்காவிட்டால் இருள்.

அத்வைதத்தில் ஆதிசங்கரர் ஒரு கேள்வி கேட்பார்.

கேள்வி: வானம் என்ன நிறம்?
பதில்: நீல நிறம்.

கேள்வி: எப்படிச்சொல்கின்றாய்?
பதில்: நான்தான் பார்க்கின்றேனே.

கேள்வி: சரி, நீ பார்க்காத பொழுது வானம் என்ன நிறம்?


அது போன்று... உங்களைப் பொறுத்ததுதான் பதிலும்.


ஆனால், அறிவியல் விளக்கம் என்னவென்றால், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் விண்வெளியில் இருப்பினும், விண்வெளியை நிரப்பும் அளவிற்கு அவற்றின் ஒளிகள் போதாது. அவைகளும் ஒன்றுக்கொன்று அடர்த்தியாக இல்லாமல், மிகத் தொலைவே அமைந்திருக்கின்றன.

பிரதிபலிக்கப்படும் ஒளிதான் நமது பார்வை என்பது. புவியில் ஒளிகள் பட்டுப் பிரதிபலிக்க மிக அடர்த்தியான தூசுக்களும், ஏனைய பொருட்களும் நம் புவியில் இருப்பதால் புவி வெளிச்சமாகத் தெரிகின்றது. விண்வெளியில் அப்படி அல்ல. அதனால் ஒளியைப் பிரதிபலிக்கும் பொருளைப் பார்த்தால் மட்டுமே ஒளி இருப்பது தெரியவரும். இல்லாவிட்டால் இருள்தான்.

No comments:

Post a Comment